பொன்னமராவதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதியில் மக்கள் விரோத மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்தியா சீனா எல்லையில் நடந்ததை மக்களுக்கு தெளிவு படுத்த கோரியும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமையில் நகர தலைவர் பழனியப்பன் முன்னிலையில் காவல் நிலையம் முன்பு மக்கள் விரோத மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்தியா சீனா எல்லையில் நடந்ததை மக்களுக்கு தெளிவு படுத்த கோரியும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காரையூர் வட்டார தலைவர் குமார், கணேஷ் சுப்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மணி, நாட்டுக்கல் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், அடைக்கலம், ஊராட்சி மன்றம் தலைவர்கள் கிரிதரன், சோலையப்பன், செல்வராஜ், மலைச்சாமி, சரவணபவன்மணி, ஏனாதி போஸ், சிறுபான்மை பிரிவு சுல்தான்,  கணேசன், சுப்பையா, மாணிக்கம், பாஸ்கரன், கதிரவன், பால்சாமி ஆசிரியர், வட்டார செயலாளர் சத்தியமூர்த்தி, அடைக்கப்ப தேவர் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − = 48