பொன்னமராவதியில் பா.ஜ.க சார்பில் பொதுமக்களுக்கு 4,000 முககவசங்கள் வழங்கல்

பொன்னமராவதியில் பா.ஜ.க சார்பில் பொதுமக்களுக்கு 4,000 முககவசங்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களுக்கும், வேன், கார், ஆட்டோ, லாரி, மினிடோர், டாடா ஏசி ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் என சுமார்  4,000 நபர்களுக்கு  முகக்கவசம் வழங்கும் விழா  நடைபெற்றது.

இதில் மாவட்ட பாஜக தலைவர் ராம.சேதுபதி தலைமையிலும், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி  உட்பட அதிகாரிகளின் முன்னிலையில் பா.ஜ.க தொண்டர்கள்  வழங்கினர். மேலும் இதில் பா.ஜ.க ஒன்றியத்தலைவர் சேது மலையாண்டி, குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − 70 =