பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை – எம்.பி.திருநாவுக்கரசர் மனுவை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் வழங்கி அனுப்ப ஏற்பாடு

மத்திய அரசின் மக்கள் விரோத பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

இதனையொட்டி திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி மாநகர் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அறிவுறுத்தியதோடு திருநாவுக்கரசர் எம்.பி. விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் வழியாக அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கோரிக்கை மனுவினை சந்திரன் மற்றும் அ.பேட்ரிக் ராஜ்குமார், மாநில சிறுபான்மைபிரிவு துணைத் தலைவர் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 24 = 25