பெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வினைக் கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான நாஞ்சில் ஜேசுராஜ் தலைமையில்  நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா தொற்றுநோய் தாக்கத்தின் போதும் கூட மக்களை சிந்திக்காமல் காட்டுமிராண்டித்தனமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

மேலும் அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கும் வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தப்ட்டது.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்  நாரயண மூர்த்தி, முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் சபீக் அகமது, டாக்டர்.தகி, ஷானவாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜித் பாஷா,  குட்டி (எ) விஜயராஜ், அம்மாசி, கனகராஜ், அப்சல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 52 = 62