பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின்பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும், சீன எல்லையில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்த கோரியும், வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் மாவட்ட பொருளாளர் எஸ் எம் பழனியப்பன், நகர செயலாளர் திருஞானசம்பந்தம், மற்றும் மாவட்ட தலைவர்,  மற்றும் செயலாளர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 76 = 77