புதுகை வரலாறு செய்தி எதிரொலி – விஜய் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடைநீக்கம்

புதுகை வரலாறு செய்தி எதிரொலியாக பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலராக ராஜா பதவியேற்று இரண்டு மாதமே ஆன நிலையில் கடந்த 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஊத்தங்கரையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திலேயே சக நண்பர்களுடன் பேனர் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார். கொண்டாடிய போட்டோ மற்றும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3