சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி திடீர் மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக இருந்த ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் மாற்றமானது சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தெரிகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − 50 =