திருப்பத்தூரில் மானாவாரி வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில்  வேளாண்மை துறையின் சார்பில் நீடித்து நிலைக்கத் தக்க மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மாவட்டத்தில் 60 கிராமங்களை தேர்வு செய்து 6000 ஏக்கர் அளவில் ஒரு கிராமத்திற்கு 100 ஏக்கர்  என்ற கணக்கில் மானாவாரியாக பயிர்   செய்யும் உளுந்து, குதிரைவாலி, ராகி என உழவுக்கு ரூ.1,250 ஒரு ஏக்கருக்கும் 50 சதவீதம் மானியமாக விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் என இரண்டு ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் சிறு தானிய பயிர்களான நெல் பயறு வகைகளுக்கு மானியமாக 50 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கூறும்போது தற்சமயம் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் காலகட்டம் என்பதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து  தராமல் ஆன்லைனில் பதி விடுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் சென்ற ஆண்டு வேலங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த முத்துசாமி என்பவர் பணியின்போது இறந்து விட்டதால் அவருடைய மனைவிக்கு அவர் பார்த்த வேலையை வழங்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பணி நியமனத்தை பெற்றுக்கொண்ட அவருடைய மனைவி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டருக்கு தன்னை பணி நியமனம் செய்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 69