தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 1,200ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,200ஐ தாண்டியது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த 5ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கையானது 1,201 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் 2,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதானல் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 58,327 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,242 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் இதுவரை 11,70,683 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5