டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாகின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு அறிவிக்கவில்லை.

இந்த மோதலை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், இருநாடுகளுக்கு இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பதற்றம் தணிந்தது. ஆனாலும் சீனா தனது படைகளை இந்திய எல்லை பகுதிகளில் குவித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவும் நாட்டின் சக்தி வாய்ந்த பீரங்கிகளை எல்லை பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயலிகள் தொடர்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − = 67