சாத்தான்குளத்தில் நடந்த படுகொலைக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது தகுந்த வடிக்கை எடுக்க வேண்டும் – தொழிலாளர்கள் கட்சி நிர்வாகி வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில், செல்போன் கடையை திறந்து வைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இரா.இளவரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ்,  பென்னிக்ஸ் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தந்தை மற்றும் மகன் படுகொலைக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலைக்கு காரணமாக இருந்த போலீஸ்காரர்கள் அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். தூய்மையான காவலர்களின் பணியை கெடுக்கும் வகையில் செயல்பட்ட அனைத்து போலீஸ்காரர்களையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது.  இதனை உயர்த்தி ரூ. 25 லட்சமாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் முதலமைச்சரை  கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இரா.இளவரசன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =