ஊத்தங்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ்.அழகிரி ஆகியோரின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஆலோசனைப்படி நேற்று பெட்டோரல் டீசல் விலை உயர்வை கண்டித்து முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.பூபதி, நகர தலைவர் விஜயகுமார், வட்டார பொருளாளர் திருமால், கோவிந்தன், முத்து, பொன்னுசாமி, அண்ணாதுரை, மகேந்திரன், கோவிந்தசாமி, ராமமூர்த்தி, ராஜேந்திரன், தனபால், குப்புசாமி, கிருஷ்ணன், அருள், காணப்பட்டி மாரி, கௌதம், சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் கொரோனோ நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் பொருளாதாரத்தில் சிரமப்படும் நேரத்தில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவாசி பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 66 =