இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் : பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இறப்பு எண்ணிக்கையும் சராசரியாக 400 என்ற அடிப்படையிலேயே சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 418 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 16,893 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3,34,822 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2,15,125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 1