அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் நடைபெறும் கோழிசந்தையால் கொரோனா பரவும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோழி சந்தை நடைபெறும். இந்த கோழி சந்தையில் நாகுடி, களக்குடி, வெட்டிவயல், மேல்மங்கலம், வீரராகவபுரம், கூத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை கொண்டுவந்து ரூபாய் 300 முதல் 800 வரை விற்பனை செய்து வருன்றனர்.

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து பெருங்காடு செவ்வாய் கோழிசந்தையில் வரும் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் கொண்டு வரப்படும் கோழியை பொதுமக்கள் வாங்கி சென்று பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்கள் வெளியே செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் பெருங்காட்டு கோழி சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமில்லாமல் முக கவசம் இன்றி பாதுகாப்பில்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நிற்பதால் கோயம்பேடு சந்தை போல் பெருங்காடு கோழி சந்தை மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 67 = 73