மதுரையில் முதலமைச்சர் அறிவித்த படி ரூ.1,000 நிவாரணத்தை எம்எல்ஏ எஸ்எஸ்.சரவணன் வழங்கினார்

மதுரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.1,000 நிவாரணத்தை எம்எல்ஏ எஸ்எஸ்.சரவணன் வழங்கினார்.

மதுரை பகுதியில் தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் பகுதிகளிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

இதனையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்எஸ்.சரவணன் சட்டமன்ற உறுப்பினர் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையை நேரில் வழங்கினார். அப்போது அவருடன் பகுதி செயலாளர்கள் வி கேஎஸ்.மாரிச்சாமி, ஏகே.முத்து இருளாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் எஸ்எஸ்.சரவணன் தெரிவிக்கையில், தற்போது கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் ஊரடங்கு உத்தரவை அறிவித்து இந்த காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரூபாய் ஆயிரம் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன் மூலம் மதுரை தெற்கு பகுதியில் உள்ள 80,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும். தொடர்ந்து இதுபோன்ற நிவாரண உதவிகளை மக்கள் கேட்காமலேயே வழங்கிடும் முதலமைச்சருக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் தெற்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + = 19