பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 7-ஆம் தேதி முதல் தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.63 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 23 நாள்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் போதிய வருமானம் இன்றி தவிக்கும் பொதுமக்கள் இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் பொட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 13