பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை – மருத்துவ நிபுணர் குழு

தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களில் கடுமையான கட்டுபாடுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெர்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் மருத்துவக்குழுவினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:- பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், ஊரடங்கை மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை எனக்கூறினர். ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய காரணத்தால், சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது.

சென்னையில் ஊரடங்கு காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ முறைகளை கையாள திட்டமிட்டு உள்ளோம் எனக் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 4