கொரோனா : தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு தொற்று உறுதி – 62 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 62 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 62 பேர் பலியாகியுள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,141 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 2,212 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47,749 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் இன்று இதுவரை இல்லாத அளவாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,167 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 17