கொரோனா : உலக அளவில் பாதிப்பு 1.02 கோடியை கடந்தது – 55 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.02 கோடியை கடந்ததுள்ள நிலையில் 55 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டிய நிலையில் இதுவரை உலகம் முழுவதும் மொத்தம் 1,02,48,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,63,172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,454 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 5,04,462 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்னொருபக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 55,56,439 பேர் குணமடைந்தும் உள்ளனர். 43,90,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து மிக மோசமாக பிரேசில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 3-வது இடத்தில் ரஷ்யாவும் 4-வது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 2