கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக தந்தை பெரியார் திராவிட கழக கட்சியினர் மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என மத்திய ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகள், ஏழை எளிய மக்கள் பலவகையான கடன் வழங்கும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி என நினைப்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

எதிர்காலத்தில் மாநில அரசு மூலம் விவசாயிகள் கடன் பெற முடியாது. பேரிடர் காலத்தில் விவசாயக் கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினாலும் தள்ளுபடி செய்ய முடியாது. குறைந்த வட்டியில் தற்போது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நகைக்கடன் பெறமுடியாது. கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் ஒன்றிணைந்த உணர்வுகளை கட்டுப்படுத்தும்.

இப்படி கூட்டுறவு வங்கிகளில் பயன்பெறும் ஏழை விவசாயிகள் அடித்தட்டு மக்கள் போன்றவர்களை பாதிக்கும் இந்த மத்திய அரசின் நடவடிக்கையை கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கக்கூடாது. அந்தந்த மாநில அரசு கூட்டுறவு வங்கிகளை எப்போதும்போல் வழிநடத்த வேண்டும் எனக்கூறி 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு துரை சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − 22 =