கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்தடுப்பு பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கொரானோ நோய்தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா இராஜேஷ் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்தடுப்பு பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் தனிமையிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என கொரானோ நோய்தடுப்பு சிறப்பு அலுவலர் பீலாராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அலுவலர் பீலா இராஜேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பத்ரிகையாளர் சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்:- தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாவட்ட பகுதிகளில் இன்று கொரானோ நோய் தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தைப் பொறுத்தவரை 110 பேர் கொரானோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 58 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதம் 62 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், தனியார் மருத்துவமனை அரசு மருத்துவமனை என 790 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் 9 ஆயிரத்து 452 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதம் பேருக்கு நோய் தொற்று இல்லை அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது.

எனவே, மாவட்ட மக்கள் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை, இரண்டு வெளிமாநில சோதனைச்சாவடிகள், 15 உள்மாவட்ட சோதனைச்சாவடிகள் ஆகியவற்றில் 24 க்கு 7 என்கின்ற வகையில் மருத்துவ குழு காவல்துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்க்கு வருபவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை, மாவட்ட மருத்துவகுழு ஆகியவை ஒன்றிணைந்து கொரோனா நோய்பரவாமல் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நோய் பரவாமல் தடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மருத்துவத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 71 = 81