காய்கனி வியாபாரிகள் விற்பனைக்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரக்கோரி மாநகராட்சி முற்றுகையிட்டு வாக்குவாதம்

திண்டுக்கல் நாகல்நகர், முனியப்பன் கோவில் தெரு, காய்கனி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரக்கோரி மாநகராட்சி முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

திண்டுக்கல் நாகல்நகர், முனியப்பன் கோவில் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக சில்லரை காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடைபாதை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஒரு குறுகிய பகுதியாக முனியப்பன் கோவில் தெரு இருப்பதால் அந்தப் பகுதியில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் செயல்பட்ட நிலையில் அங்கு காலி செய்து விட்டனர்.

எனவே கடந்த 10 நாட்களாக முனியப்பன் கோவில் தெருவில் மீண்டும் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளை இன்று கடை போட விடாமல் போலீசார் தடுத்தனர். இதை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கையை முன் வைத்தனர், அப்போது பேசிய வியாபாரிகள்:-

தாங்கள் 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் இடத்தில் தற்போது கடைகள் அமைக்க போலீசார் அனுமதி மறுக்கும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக உரிய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் அல்லது வேறு வசதியான இடத்திற்கு மார்க்கெட்டை மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தாவிட்டால் வாழ்வாதாரம் இன்றி தாங்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − 30 =