உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பென்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் இவரது மகள் சோபனா 20, இவர் உத்திரமேரூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா ஊரடங்கினால் கம்பெனி இயங்காத நிலையில் வீட்டில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் டி.வி பார்ப்பதற்காக பிளக் இல்லாத மின் ஒயரை
சொருகியுள்ளார். அப்போது சுவிட்சு பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சோபனா துாக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சோபனா மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள இரும்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோபனாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 30 = 39