இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 12,010 பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 12,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3,21,723 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 2,10,120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் 1,64,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் 7,429 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் 83,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் மட்டும் 2,623 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500ஐ தாண்டியதாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 82,275 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,079 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 7 =