அசாமின் தொடந்து கனமழை, வெள்ளத்திற்கு மேலும் 2 பேர் பலி

கவுகாத்தி : அசாமில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர் பலியாகினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உத்திரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இத்துடன் அசாம் மற்றும் மேகாலயா போன்ற பிற மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அசாமில் அதிக அளவில் கனமழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமின் 23 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் வெள்ளநீர் புகுந்ததால், சுமார் 2000 கிராமங்கள் நீரில் மூழ்கின, மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் நீரில் மூழ்கி 2பேர் தனித்தனியாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தமாக 18 பேர் பலியானதாக கூறப்படுகிறது. வெள்ள பாதிப்பு காரணமாக அசாமில் சுமார் 9.3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக 23 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. அவை ( தேமாஜி, உதல்கூரி, டாரங், நல்பாரி, ஹோஜாய், நாகான், கோலாகாட், ஜோர்ஹாட், மஜூலி, சிவசாகர், பார்பேட்டா, லக்கிம்பூர், பிஸ்வநாத், போங்கைகாவ்ன், கோக்ராஜர், துப்ரி, மேற்கு கர்பி அங்லாங், தெற்கு சல்மாரா, கோல்பாரா, கம்ரூப், மோரிகான், திப்ருகார், டின்சுகியா ) ஆகியவை உள்ளன.

அசாமின் வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அசாமின் நீர்வளத்துறை அமைச்சர் கூறுகையில், மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. கொம்பு காண்டாமிருகத்தின் தாயகமான காசிரங்கா தேசிய பூங்காவின் பெரும்பகுதி நீருக்கடியில் மூழ்கியுள்ளது.

தேயிலைத் தோட்டங்களுக்கு புகழ்பெற்ற அசாம், ஒவ்வொரு ஆண்டும் பருவகால வெள்ளத்தால் பாதிக்கப் படுகிறது, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட கட்டாயப்படுத்துகின்றன.

மீட்பு நடவடிக்கை, சமூக இடைவெளி பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 37 = 42