பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் – கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கேள்வி

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாடியதர் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது நாடுமுழுவதம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையிலே ஊத்தங்கரை நகருக்கு புதியதாக வந்திருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் விழா நடத்தினர்.

அந்நிகழ்விலே பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் மாஸ்க், சானிடைசர், மற்ற உபயோகமான நிகழ்வை செய்யலாம். ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பேரூராட்சி அலுவலக வளாகத்திலே சமூக இடைவெளி இல்லாமலும் பேனர் வைத்தும் இவரே தலைமை தாங்கி கேக் வெட்டி விழா கொண்டாடியது சட்டத்தையும் மதிக்காமல் விஜய் பிறந்தநாளை இவர் ரசிகர்மன்ற தலைவர் போல அரசு அலுவலகத்திலே கொண்டாடியது எந்த வகையிலே நியாம் ஆகும்?

மேலும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கல் என்ற நிகழ்விற்காக 10×20 பேனர்கள் ஊத்தங்கரை முழுவதும் வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கியது யார்? இதை காரணம் காட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் ஊத்தங்கரையில் பேனர் கலாச்சாரம் உருவாக இதுவே சிறந்த முன் உதாரணமாக இருக்க போவதற்கு காரணமாகாதா? மேலும் கொரோனா அவசர காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி இல்லாத நிலையில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா சர்வாதிகாரி போல தன் இஷ்ட்டபடி செயல்படுவது மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 41 = 42