சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் இன்று நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரனைக்கு பிறகு சிறையில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தனர்.

இந்த சம்பவத்திற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்திலுள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள்தான் காரணம் என குற்றசாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும் சாத்தான்குளம் ஸ்டேசனில் வேலை பார்த்து வந்த அனைத்து காவலரும் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

இந்தநிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக பெர்னாட் சேவியர் இன்று பதவியேற்றுள்ளார். இவர் இதற்கு முன் குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − = 18