கொரோனா தீவிரம் : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 16,095 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் 13,832 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,713 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 + = 59