கொரோனா : உலக அளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5 லட்சத்தை கடந்த பலி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிய நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,76,568 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியை கடந்து 1,00,75,115 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,547 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 5,00,626 ஆக உள்ளது.

இந்நிலையில் 52,48,699 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 43,25,790 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 8