சாத்தான்குளம் விவகாரம் : குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெச் ராஜா வலியுறுத்தல்

சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 காவலரையும் தமிழக அரசு உடனடியாக சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மாஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 82