கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள் – பாதிப்பு ஒரு கோடியை நெருங்கியது

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பானது ஒரு கோடியை நெருங்கியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஊரடங்கை ஒரு ஆயுதமாக கொண்டு அமலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் 1,94,190 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,98,547 ஆக உயர்ந்து 1 கோடியை நெருங்கியுள்ளது.

மேலும் கொரோனா வைரசில் இருந்து இதுவரை 51,47,591 பேர் குணமடைந்துள்ள நிலையில், 42,54,877 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,893 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 4,96,079 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − 38 =