ஆலங்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது

ஆலங்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுப்பட்ட ஆறு பேரை ஆலங்குடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிதம்பர விடுதியைச்சேர்ந்த ஆறு இளைஞர்கள் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் அங்குள்ள வனப்பகுதி காடுகளில் சுற்றித்திரிவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் தலைமைக் காவலர் ரெங்கசாமி மற்றும் எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் மதி ஆகியோர் நேற்று அதிகாலை முதல் சிதம்பரவிடுதி செல்லும் சாலையில் பள்ளத்திவிடுதி கிராமத்திலிருந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

பின்னர் அவர்கள் தேடியதில் வனப்பகுதிகாட்டில் சட்டத்திற்கு புறம்பாக முயல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்த ஆறு பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

மேலும் விசாரித்தபோது இவர்கள் கடந்த சில மாதங்களாக முயல் பிடித்து அடித்து உண்பது மற்றும் விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட்டது உண்மைதான் என்றும், கையில் முயல் பிடிக்கும் வலை, சக்திவாய்ந்த பேக்ட்ரிலைட் இவைகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

பின்னர் ஆறு பேரும் ஆலங்குடி தாலுகா கொத்தமங்களம் அருகில் உள்ள சிதம்பரவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆலங்குடி போலீஸ் முன்னிலையில் ஒப்புக்கொண்டதின் பேரில் பழனிவேல் மகன் வீரமணி(21), சரவணன் மகன் பரமேஸ்வரன்(18), ராஜேந்திரன் மகன் திருமுருகன்(19), ராஜகோபால் மகன் உத்தமநாதன்(36), சின்னப்பா மகன் புகழேந்தி(20), ராஜ்குமார் மகன் மணி(24) ஆகிய 6 பேரையும் கைது செய்து காவல் உத்தரவுபடி திருவரங்குளம் வனச்சரகர் சமீர் அகமதுவிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 1 =