பெட்ரோல், டீசல் விலை : தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த 20 நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.83.37க்கு விற்பனையாகிறது. டீசல் 1 லிட்டர் ரூ.77.44க்கும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83ம், டீசல் விலை ரூ.9.22ம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுகிறது. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனாவின் தாக்கம் காச்சா எண்ணெயிலும் கை வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலராக சரிந்தது. பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் உயரத்தொடங்கியுள்ளது.

இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தி வருகின்றன. ஜூன் 7ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது. 20வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் உயர்ந்துள்ளது.

கடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83ம் டீசல் விலை ரூ.9.22ம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளையும் லாரி உரிமையாளர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − = 93