தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.15.44 கோடி அபராதம் வசூல் – 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.15.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை மீறிய 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,45,763 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 6,73,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.15.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =