கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் – உ.பி. ரோஜ்கார் அபியான் திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் பேச்சு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று உ.பி. ரோஜ்கார் அபியான் திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் உரையாற்றினார்.

ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தை  பிரதமர் மோடி கடந்த 20-ம் தேதி துவக்கி வைத்தார். 

இத்திட்டதின் ஒரு பகுதியாக இன்று உத்திர பிரதேசத்தில் ஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கார் அபியான் திட்டப்பணிகளை பிரதமர் மோடி மற்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர்.

பின்னர் இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவால் பெரிய நெருக்கடியில் இருக்கும்போது, ​​உத்தரபிரதேசம் காட்டிய தைரியம், கொரோனாவை கையாண்ட விதம், நிலைமையைக் கையாண்ட விதம், வெற்றி பெற்ற விதம் பாராட்டத்தக்கது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசங்களை அணியவேண்டியிருக்கும்’ என்றார்.

கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின்கீழ் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 125 நாட்களுக்கு இப்பணி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 10