உலக அளவில் கொரோனா பாதிப்பு 97 லட்சத்தை கடந்தது – பலி எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது

உலக அளவில் கொரோனா பாதிப்பு 97 லட்சத்தை கடந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.

உலகம் முழுவதும் கொரோனாவால் திணறி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,79,718 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கையானது 97,02.386 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5,179 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 4,90,989 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் குணமடந்தோர் எண்ணிக்கையானது 50,49,107 ஆக அதிகரித்துள்ள நிலையில் 41,62,290 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − 18 =