பேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. 

கொரோனா கால ஊரடங்கால், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் விதமாக பேராவூரணி வாரியர்ஸ் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மூலம், பல்வேறு தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு வாரியர்ஸ் புடோகான் கராத்தே தலைமை பயிற்சியாளர் ஸ்பர்ஜன்ராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ஜெபமாலை மேரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேத.குஞ்சருளன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெஸி, பேராவூரணி நகர வர்த்தகர் கழக பொருளாளர் எஸ்.ஜகுபர் அலி, ஆசிரியர் கவின், மின்வாரியம் மரியசூசை, ரயில்வே ஒப்பந்ததாரர் காரல் மார்க்ஸ், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள, சென்சாய் சம்சுதீன், சென்சாய் திவ்யராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4