சேலத்தில் ரயில்வே மேம்பால பணிக்காக அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் வலியுறுத்தல்

சேலத்தில் ரயில்வே மேம்பால பணிக்காக அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் அவ்வபோது ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 50 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கட்டுமான பணிக்கு இடையூறாக தொங்கும் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, விசிக, காங்கிரஸ், அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மேம்பால பணிக்காக அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்ய கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும் சேலம் மாநகரின் அடையாளமாக திகழும் அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்யாமல் மேம்பாலத்தை கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − = 31