புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்டம் முழுவதும், இதுவரை 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு , 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் தொடர்ந்து 100 நாட்களாக, இடைவிடாது, இரவு, பகல் பாராமல், உழைத்த ரஜினி மக்கள் மன்ற புதுக்கோட்டை மாவட்ட காவலர்களுக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து விழா தொடங்கியது.

தொடர்ந்து 100வது நாளாக இன்று, புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் கே.கே.முருகுபாண்டியன் ஏற்பாட்டில் கீரனூரில் இன்று “இரண்டாயிரம் “ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முகக்கவசம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மக்கள் அனைவருக்கும் சானிடைசர் கொண்டு கைகள் கழுவப்பட்டு, முகக்கவசம் அணிவிக்கப்பட்டு, சமூக இடைவெளி கடைபிடித்து, பாதுகாப்பான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து இன்றுடன் “100 நாட்களாக” ரத்த தானம், அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், கபசுர குடிநீர், முகக்கவசம், கையுறைகள், விழிப்புணர்வு நோட்ஸ், வேட்டி,சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர்கள், வெளி மாநிலத்தவர், துப்புரவு தொழிலாளர், மருத்துவர், செவிலியர், காவல் துறையினர், விவசாயிகள். காச நோயாளிகள், நாடக நடிகர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், குடுகுடுப்பை காரர்கள் உள்ளிட்ட மக்களுக்கு உதவி வழங்கி வருகின்றனர். இன்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி மூலமாக நிவாரண உதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் மாவட்ட மன்ற அமைப்பாளர் கே கே முருகுபாண்டியன்.அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2000 குடும்பங்களுக்கு மன்ற நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ரஜினி மக்கள் மன்ற, மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி, மகளிரணி, மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.