சூரிய கிரகணம் பார்த்த துளிர் இல்ல குழந்தைகள்

புதுக்கோட்டை கலீப் நகரில் உள்ள டிவிஎஸ் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் சூரிய கிரகண நிகழ்வை பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் முகக்கவசம் அணிந்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கண்ணாடி வழியாக சூரிய ஒளியை சுவரில் பிரதிபலிக்கச் செய்தும் பார்க்கப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பகுதிநேர சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் குழந்தைகளுக்கு சூரிய கிரகணம் குறித்து விளக்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6