கல்லணை வாய்க்காலில் உடைப்பு – தண்ணீர் நிறுத்தம் விவசாயிகள் அதிருப்தி

பல வருடங்களுக்கு பிறகு கடந்த 12 ந் தேதி மேட்டூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்தார்.16 ந் தேதி கல்லணைதிறக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்த முதல் நாளே புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமமான வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்வெளியில் பாய்கிறது. சுமார் 10 மீட்டர் அளவுக்கு உடைந்து பாய்ந்தோடுகிறது.


இதனைப் பார்த்த விவசாயிகள் அப்போது இளைஞர்கள் சேர்ந்து தடுப்புகம்புகள் அமைத்து மணல் வைக்கோல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரையை பலப்படுத்துங்கள் என்று மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்கு முன்பில் இருந்தே விவசாயிகள் கோரிக்கை வைத்த போதும் பொதுபணிதுறையினர் கண்டு கொள்ளாததே தற்போது உடைப்பு ஏற்பட காரணம் என்கிறார்கள் விவசாயிகள். கடந்த வருடம் தஞ்சையில் சில இடங்களில் உடைத்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீரை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வந்த நேரத்தில் திடீர் என ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் அனைத்தும் வீணாக செல்வதை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர் மேலும் எந்த ஒரு பகுதியிலும் உடைப்பு ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதற்கிடையே கல்லணை கால்வாயில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தியுள்ள பொதுப்பணித்துறையினர் தற்போது வாய்க்காலில் வரும் தண்ணீர் நின்றவுடன் உடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − = 13