கல்லணை கால்வாயில் இன்று அதிகாலை ஏற்பட்ட உடைப்பு 15 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது

பல வருடங்களுக்குப் பிறகு கடந்த 12 ந் தேதி மேட்டூர் அனையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரைத் திறந்துவிட்டார். பின்னர், 16 ந் தேதி தஞ்சை மாவட்டம் கல்லனையிலிருந்து திறக்கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு பகுதி மேற்பனைக்காட்டிற்கு தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்த முதல் நாளே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பங்குடி கிழக்கு பகுதி கால்வாயில் சுமார் 50 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. சுமார் 300 கன அடி தண்ணீர் வயல்வெளியில் புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலம் வெள்ளம்போல் காட்சி அளித்தது.
இதனைப் பார்த்த விவசாயிகள் மரக்கம்புகளைக்கொண்டு 2 வரிசையில் சாரம் அமைக்கப்பட்டது. அதற்கு இடையே மணல் மூட்டைகள் மற்றும் வைக்கோல் கட்டுகளை அடுக்கியும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கரையை பலப்படுத்துங்கள் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதே காரணம் என குற்றம் சாட்டினர் விவசாயிகள்.
கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் இதே போல் உடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பங்குடியில் கல்லனை கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த பின்
மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறுகையில்:

மண்மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக கரை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அரசிடம் சிறப்பு நிதி பெறப்பட்டு நிரந்தரமாக கரை பலப்படுத்தப்படும்.இதே போன்று வேறு எந்த இடத்திலும் உடைப்பு ஏற்படாத வகையில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலத்திற்கு புகுந்த தண்ணீரால் பயிர் சேதம்,பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அறிக்கை கொடுக்குமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 88 = 98