அரிமளம் ஒன்றியம் கைக்குலான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் நன்கொடையில் நடைபெறும் ‘பள்ளி சீரமைத்தல் மற்றும் மெய்நிகர் வகுப்பறை (ஸ்மார்ட் க்ளாஸ்) அமைத்தல்’ பணியின் ஒரு பகுதியாக நேற்று (19.06.2020) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தோட்டக்கலை அலுவலர் நந்தகுமார் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியர் திருமால் பாண்டியன் வழங்கினார். மேலும் கும்மங்குடி ஊராட்சி துணைத்தலைவர் சாந்தி கணேசன் 60 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது கைக்குலான்வயல் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி குமார் தோட்டம் அமைக்க தேவையான தண்ணீர்க் குழாய்கள் வழங்கினார். சமூக இடைவெளி பின்பற்றி பாதுகாப்புடன் நடந்த இந்நிகழ்வில் உதவி ஆசிரியர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர், செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.