புதுடில்லி: உலகில் கொரோனா கட்டுக்குள் வந்தபின், யோகா மேலும் பிரபலமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி 6வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு, வீடியோ வாயிலாக தெரிவித்ததாவது: கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு ‘வீட்டுக்குள் யோகா’, ‘குடும்பத்துடன் யோகா’வை மக்கள் பின்பற்ற வேண்டும்.
யோகா நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வலுவான மனதையும், ஆரோக்கியமான உடலையும் அளிக்கும். கொரோனா கட்டுக்குள் வந்த பின், நோய் தடுப்பு, சுகாதாரத்துக்கான கவனம் மேலும் கூடும். எனவே உலகில் யோகா மேலும் பிரபலமாகும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.