பிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ”எம்.எஸ்.தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி” படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.