நடிகை ரம்யாகிருஷ்ணன் காரிலிருந்து 102 மது பாட்டில்கள் பறிமுதல் – டிரைவர் கைது

நடிகை ரம்யாகிருஷ்ணன் காரிலிருந்து 102 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீசார், அங்கு வந்த TN07CQ0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இச்சோதனையில் அந்தக் காரில் ஏராளமான மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. 

உடனே போலீசார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 24 = 27