புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி புதுகைவரலாறுக்கு உறுதி

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வைத்த மரக்கன்றுகளுக்கான மரக்கூண்டுகள் திருட்டுபோய் இருப்பது அதிகாரிகள் மற்றும் அதனை பராமரிக்கும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானமானது நகரின் மையபகுதியில் அரசுமகளிர் கலைக்கல்லூரி அருகில் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் புதுக்கோட்டை நகரில் உள்ள பொதுமக்கள், வயதானவர்கள் மற்றும்  குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என பலரும் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மேற்க்கொள்ளுவதற்காக பயன்படுத்தகூடிய மிகவும் முக்கியமான மைதானம் ஆகும்.

ஆசியா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமையை தேடிதந்த சாந்தி, லெட்சுமணன், சூர்யா, அனுராதா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்றது இந்த விளையாட்டு மைதானத்தில் தான்.

மாவட்டத்திலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானம் இது ஆகும் என்பதால் அரசுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் பலர் பங்களிப்புடன் இந்த விளையாட்டு மைதானத்தில் வாக்கர்ஸ் கிளப் என்ற ஒன்றை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பித்து அதில் பல்வேறு பராமரிப்புகளையும் அந்த அமைப்பினர் மேற்க்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மைதானம் உள்ளேயே நடைபாதை அமைத்தும் அதனை சுற்றி வேம்பு, புங்கை, நீர்மருது உள்ளிட்ட சுத்தமான காற்றை தரக்கூடிய மரங்களை நடவு செய்தும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலர் கண்ணன் என்பவர் மூலம் நல்லமுறையில் பராமரித்தும் வருகின்றனர்.

தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை இந்த மைதானத்தில் தான் கொண்டாடி மகிழ்ந்தது என்பது கூடுதல் செய்தியாகும். அப்போது வாக்கர்ஸ் கிளப் பல ஆண்டுகளாக பராமரித்திருந்த நடைபாதைகள் சேதபடுத்தப்பட்டு இன்றுவரை அது சரிசெய்யபடவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதற்கிடையில் மக்களின் முழு ஆதரவின் காரணமாக மீண்டும் பலர் பங்களிப்புடன் வாக்கர்ஸ்கிளப் முயற்சியுடன் நடைபாதை முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, ரோட்டரிசங்கங்களின் பங்களிப்புகளுடன் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதை போல் புதுகைவரலாறும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து குடிநீர்தொட்டியும் அமைத்துக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரை அழைத்துக்கொண்டு வந்து புதுக்கோட்டை ரோட்டரிசங்கம் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி புதுகையை பசுமையாக்குவோம் என்ற அடிப்படையில் பல்வேறு வகையிலான 60 மரக்கன்றுகள் நடவு செய்யபட்டு அனைத்திற்கும் கூண்டுகளும் அப்போதே அமைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் தான் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீதிபதி வைத்த மரகன்றுகளின் கூண்டுகள் 20 திருட்டு போய் உள்ளது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாதம் வரையில் இருந்த மரகூண்டுகள் தற்போது ஊரடங்கால் காலத்தில் காணாமல் போய் உள்ளது வேலியே பயிரை மேய்ந்துள்ளதா? என சந்தேகம் எழுப்பும் வாக்கர்ஸ் கிளப்பினர் உடனடியாக திருடுபோன மரகூண்டுகள் கொண்டுவந்து மர கன்றுகளுக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன் டாஸ்மார்க் திறந்து விட்டும், பேருந்துகளை இயக்கிவிட்டும் ஊரடங்கு தமிழகத்தில் தான் வித்தியாசமான முறையில் கடைபிடிப்பதாக விமர்சிக்கும் அவர்கள் மூடப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை உடனடியாக திறக்க வேண்டும். நாங்கள் சமூக இடைவெளியுடன் நடை பயிற்சிகள் மட்டுமே செல்ல விரும்புகின்றோம் மாறாக நாங்கள் விளையாட்டு போட்டிகளையோ அல்லது கூட்டமாக அமர்ந்து வெட்டிகதை பேசவோ மைதானத்தை திறக்க சொல்லவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மரகன்றுகளின் கூண்டுகள் திருடுபோனது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதியிடம் கேட்டதற்கு இந்த புகார் தற்போதுதான் எனது கவனத்திற்கு தங்கள் வாயிலாக வந்துள்ளது. உடனடியாக அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடிக்க மைதானத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் அமைக்க அரசிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி மேற்க்கொள்ள யாரையும் அனுமதிக்க முடியாது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சமூக நலன் சார்ந்து பசுமையை பாதுக்காக சமூக அமைப்பான ரோட்டரி நடத்திய மரகன்றுகள் நடும் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி கலந்துக்கொண்டு நடவு செய்த மரகன்றுகளின் கூண்டுகள் காணாமல் போய் உள்ளது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதுடன் மரகன்றுகளுக்கு கூண்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது புதுகை வரலாறின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 7