பயணியர் நிழற்குடை திறப்பு விழா மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி ஆலம்பட்டி பகுதியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி காலனி முதல் குறுக்குத்தெரு வரை ரூ.17.26 லட்சம் மதிப்பில் நடைபெறவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்து கல்வெட்டினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் நு.டீ காலனி முதல் குறுக்குத்தெரு வரை ரூ.17.26 லட்சம் மதிப்பில் 600 மீட்டர் நடைபெறவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது:-
புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடன் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உத்தரவுவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர்வசதி, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி ஆலம்பட்டி பகுதியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் காலனி முதல் குறுக்குத்தெரு வரை தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.17.26 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துனைத்தலைவர் பழனிசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசம், வசந்தா, ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துறைபாண்டியன், விஜயபாண்டியன், சுப்புராஜ், தனஞ்ஜெயன் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =