நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மானியத்துடன் கூடிய தொழில்கடன் – மாவட்ட கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் ரூ.30 லட்சம் மானியத்துடன் கூடிய தொழில்கடன் பெற தகுதியுடைய தொழில் முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த முதல் தலைமுறை இளைஞா்கள் புதிதாக உற்பத்தி, சேவைத் தொழில்களை அமைக்க தமிழக அரசால் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திட்டமதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில்களுக்கு கடனுதவி பெற இயலும்.

திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். மேலும், தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோா்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினா் 5 சதவீதமும் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும்.

நிகழ் நிதியாண்டு வேலூா் மாவட்டத்தில் 25 தொழில் முனைவோா்களுக்கு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி செய்யப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.2 கோடியே 50 லட்சம் மானிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டத்துக்கான திட்ட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பட்டம், பட்டயம், ஐடிஐ, தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் சுயமாக தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப் பிரிவினா் 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்புப் பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 15 நாள்கள் கட்டாய தொழில் முனைவோா் பயிற்சி வழங்கப்படும். வியாபாரம், நேரடி விவசாயத்துக்கு இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது மேலும் விவரங்கள் பெற பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், காந்தி நகா், காங்கேயநல்லூா் சாலை, வேலூா் -6 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2242413, 2242512 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6