தனியார் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

திருப்பத்தூரில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தில்  மாவட்ட பிராமண மகளிர் அமைப்பு சார்பாக காட்மேன் ஒளிபரப்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளைஞரணியினர் புகார் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களாக தனியார் சேனலில் (ஜி 5 சேனலில்) ‛காட்மேன்’ சினிமாவிற்கான டிரைலர் ஒளிபரப்பில் பிராமணர் மற்றும் இந்து சமயத்தை தரக்குறைவாக இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்ததாக கூறி பிராமணர்கள் நகர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த காட்மேன் ட்ரெய்லர் வந்ததில் இருந்து தங்களின் சமூக பெண்கள் கல்லுாரி மற்றும் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படுவதாகவும், ஊடகம் மற்றும் பத்திரிக்கை தர்மத்தை மீறிய இந்த செயலைக் வன்மையாக கண்டிப்பதோடு அதற்கு உரியவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராமணர்கள் சங்க மகளிர் அமைப்பின் சார்பாக இளைஞர்கள் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதில் பிராமணர் சங்க மாவட்ட துணை தலைவர் பட்டமங்களம் எஸ்.தண்டாயுதபாணி குருக்கள், கண்டரமாணிக்கம், எம்.சீனிவாச பட்டாச்சாரியார், மதகுபட்டி எஸ்.வெங்கடேஷ் குருக்கள், சொக்கநாதபுரம் எஸ்.சங்கர், திருப்பத்தூர் என்.சரவணன் குருக்கள், கண்டரமாணிக்கம் கே.தியாகு, எ.மாதவன் பட்டாச்சாரியார், பாகனேரி எஸ்.கணபதி குருக்கள், கண்டரமாணிக்கம் வெங்கட்ராமன், பட்டமங்களம் எஸ்.ஆத்மநாத குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =